அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 230 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக
270 கி.மீ. சென்றால் இத் தலம். மயிலாடுதுறையிலிருந்து வரும்போது திருப்பனந்தாள் ஆடுதுறை வழியாக 26 கி.மீ.
வரவேண்டும். கும்பகோணத்திலிருந்து திருபுவனம் வழியாக 9 கி.மீ. ல் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 226 கி.மீ.,
சென்னையிலிருந்து 276 கி.மீ. திருச்சியிலிருந்து 95 கி.மீ. மதுரையிலிருந்து 226 கி.மீ
வரிசை எண் : 147
சிறப்பு : வரகுணப் பாண்டியனுக்கு பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம். கிழக்குக் கோபுர வாயிலில் பிரமகத்தி உள்ளது.
ஐந்து பிராகாரங்கள் உள்ள பெரிய கோயில். பேய் பிடித்தவர்கள் வெளிப்பிராகாரமான அஸ்வமேத பிராகாரத்தைச் சுற்றி
தம் நோய் நீங்கப் பெறுகிறார்கள்.
இறைவன்:மகாலிங்கேஸ்வரர், மருதவனேஸ்வரர்
இறைவி : பிருகத்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை
தலமரம் : மருது
தீர்த்தம் : சூரிய தீர்த்தம
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திருவிடைமருதூர் & அஞ்சல் – 612 104
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.30 – 12.30 ;மாலை 04.30 – 09.00
தொடர்புக்கு : 0435-2460660
இருப்பிட வரைபடம்
|