அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 231 கி.மீ., சீர்காழியிலிருந்து மங்கைமடம் வழியாக 11 கி.மீ.
செங்கல்பட்டிலிருந்து 221 கி.மீ., சென்னையிலிருந்து 271 கி.மீ. திருச்சியிலிருந்து 199 கி.மீ.
மதுரையிலிருந்து 326 கி.மீ.
வரிசை எண் : 65
சிறப்பு : மெய்கண்டார் அவதாரத்தை உலகுக்கு அளித்த தலம். பெரிய கோயில். மூன்று குளங்கள் உள்ளன.
மருத்துவன் என்பவனுக்கும் நந்தியெம்பெருமானுக்கும் நடந்த போரில் மருத்துவன் விட்ட சூலம் நந்தியின் உடலை ஒன்பது
இடங்களில் துளைத்துச் சென்றது. அந்த ஏழு துளைகளையும் நந்தியின் உடலில் காணலாம். பின்பு இறைவன் அகோர மூர்த்தி
வடிவில் வந்து அவனைக் கொன்றார். அகோர மூர்த்தியின் வடிவம் மிக அழகு. அவர் திருவடியில் மருத்துவனைக் காணலாம்.
இத்தலத்தில் வந்து மூன்று தீர்த்தங்களிலும் நீராடி இத்தலத்துக்குரியப் பதிகத்தினைப் பாடி இறைவனை வழிபடும் தம்பதியர்க்கு
குழந்தைப் பேறு நிச்சயம் உண்டு என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.
இறைவன்: சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டுநாதர்
இறைவி : பிரமவித்யாநாயகி
தலமரம் : வடஆலமரம்
தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு & அஞ்சல் – 609 114
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ;மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04364-256424
இருப்பிட வரைபடம்
|