banner
சோழநாடு - திருவெண்டுறை (வண்டுதுறை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 281 கி.மீ. மன்னார்குடியிலிருந்து 10 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 273 கி.மீ., சென்னையிலிருந்து 324 கி.மீ. திருச்சியிலிருந்து 103 கி.மீ. மதுரையிலிருந்து 232 கி.மீ.
வரிசை எண் : 229
சிறப்பு : பிருங்கி முனிவர் வண்டு உருவில் வழிபட்ட தலம்.
இறைவன்: மதுவனேஸ்வரர், பிரமரேஸ்வரர், வெண்டுறைநாதர்
இறைவி : சத்யதாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வெண்டுறைநாதர் திருக்கோயில், வண்டுதுறை & அஞ்சல் – 614 717 ஆதிச்சபுரம் s.o மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 11.00 ; மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 04367-294640

இருப்பிட வரைபடம்


ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியோர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்
போதியலும் முடிமேற் புனலோடரவம் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே  
          - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 ஆதியன் ஆதிரையன்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க