அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 254 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து
14 கி.மீ. ல் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் கோமல் ரோடில் திரும்பி அதில் 5 கி.மீ.
செல்லவேண்டும். குத்தாலத்திலிருந்தும் வரலாம். குத்தாலத்திலிருந்து 5 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 274 கி.மீ.,
சென்னையிலிருந்து 324 கி.மீ. திருச்சியிலிருந்து 114 கி.மீ. மதுரையிலிருந்து 244 கி.மீ.
வரிசை எண் : 155
சிறப்பு : கம்பர் அவதாரத்தலம். கோயில் இருக்கும் தெருவின் தொடக்கத்தில் கம்பரின் நினைவாலயம் உள்ளது.
இக்கோயிலின் வீதியைக் கடந்து எதிர்ப்புறத்தில் ஆமருவியப்பன் (வைணவத் தலம்) கோயில் உள்ளது. இறைவனும்
மகாவிஷ்ணுவும் சொக்கட்டான் ஆடியபோது மகாவிஷ்ணு வெற்றி பெற்றது கண்டு தேவி சிரித்தாளாம். அதனால்
இறைவன் அவளைப் பசுவாகவும் விஷ்ணுவை பசு மேய்ப்பவனாகவும் பிறக்குமாறு ஆணையிட்டாராம். இத் தலத்தில்
அம்பிகை பசுவாக இறைவனை வழிபடுகிறாள். ஆயனாக வந்த விஷ்ணு ஆமருவியப்பனாக எதிர்ப்புறக் கோயிலில் காட்சியளிக்கிறார்.
இறைவன்:வேதபுரீஸ்வரர், அத்யாபகேசர்
இறைவி : சௌந்தரநாயகி
தலமரம் : சந்தனம்
தீர்த்தம் : வேதாமிர்த தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்,
தேரிழந்தூர் & அஞ்சல் – 609 808
மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 - 12.00 ;மாலை 04.00 - 08.00
தொடர்புக்கு : 04364-237690
இருப்பிட வரைபடம்
|