அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 248 கி.மீ. கும்பகோணத்திலிருந்து
15 கி.மீ. ல் அமைந்துள்ளது. குத்தாலம் தாண்டி திருவாலங்காடு என்னுமிடத்திலிருந்து 1 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து
240 கி.மீ., சென்னையிலிருந்து 295 கி.மீ. திருச்சியிலிருந்து 141 கி.மீ. மதுரையிலிருந்து 252 கி.மீ.
வரிசை எண் : 153
சிறப்பு : திருஞானசம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்காக இறைவனை வேண்டிப் பொன் பெற்ற தலம். அம்பிகை
வழிபட்ட தலம். திருமூலர் தங்கி இருந்து திருமந்திரம் அருளிய தலம். திருமூலர், திருமாளிகைத்தேவர் இவர்களின்
சமாதிக் கோயில்கள் உள்ள தலம். இங்குள்ள நந்தி மிகப் பெரியது
இறைவன்:மாசிலாமணீஸ்வரர், கோமுக்தீஸ்வரர்
இறைவி : ஒப்பிலாமுலையம்மை, அதுல்யகுஜாம்பிகை
தலமரம் : படர் அரசு
தீர்த்தம் : கோமுக்தி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்,
திருவாவடுதுறை & அஞ்சல் – 609 803
(வழி) நரசிங்கன்பேட்டை
மயிலாடுதுறை RMS,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07 - 12.00 ; மாலை 04.00 - 08.30
தொடர்புக்கு : 04364-232055, 9443900408
இருப்பிட வரைபடம்
|