அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 262 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ.,
சென்னையிலிருந்து 305 கி.மீ. திருச்சியிலிருந்து 125 கி.மீ. மதுரையிலிருந்து 267 கி.மீ.
வரிசை எண் : 204
சிறப்பு : பிறக்க முத்தி தரும் தலம். பஞ்சபூதத் தலங்களுள் இது மண் தலம். சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடக் காரணமாக
அமைந்த தலம். பரவையார் அவதாரத்தலம். தியாகராஜர் அஜபாநடன மூர்த்தியாக நடனம் ஆடும் தலம். மனுச்சோழ சக்கரவர்த்தி
ஆண்ட பதி. திருமூலட்டானம் என்றும் பூங்கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. தண்டியடிகள், கழற்சிங்கர், விறன்மிண்டர்,
நமிநந்தியடிகள் செருத்துணையார் ஆகிய நாயன்மார்கள் தொண்டு செய்த தலம். மாலை பூசையின்போது இந்திரனே வந்து பூசை
செய்வதாக ஐதீகம். எனவே சிவாசாரியார் நீண்ட அங்கி மற்றும் தலைப்பாகை அணிந்து வந்து பூசை செய்கிறார். சப்தவிடங்கத்
தலங்களுள் ஒன்று. கோயிலுக்குள் ஏராளமான சந்நிதிகள் உள்ளன. ஐந்து பிராகாரங்கள். ஊஞ்சல் மண்டபம், சித்திரசபை மண்டபம்,
புராண மண்டபம், மகாமண்டபம் என்று மண்டபங்கள் உள்ளன. ஆயிரம்கால் மண்டபம் தேவாசிரிய மண்டபம் எனப்படும். இங்கு
அமர்ந்திருந்தபோதுதான் விறன்மிண்டர் சுந்தரரை வெகுண்டு சுந்தரனும் புறகு, இறைவனும் புறகு என்று சொன்னது. சுந்தரர்
விருத்தாசலத்தில் மணிமுத்தாறு நதியில் இட்ட பொன்னை இத்தலத்தில் உள்ள கமலாலயத் திருக்குளத்தில் எடுத்தார் என்பது
வரலாறு. திருவாரூர்த் தேர் அழகு என்பர். தேர் வடிவில் ஒரு விளக்கு தியாகேசர் சந்நிதியில் உள்ளது. பஞ்சமுக வாத்தியம் சிறப்பானது.
இறைவன்: வன்மீகநாதர், புற்றிடம்கொண்டார், தியாகராஜசுவாமி
இறைவி : கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. தியாகராஜசுவாமி திருக்கோயில்,
திருவாரூர் & அஞ்சல் – 610 001
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04366-242343
இருப்பிட வரைபடம்
|