banner
சோழநாடு - திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 230 கி.மீ. சீர்காழியிலிருந்து 30 கி.மீ. சாய்க்காட்டிலிருந்து 3 கி.மீ.ல் கோயில். செங்கல்பட்டிலிருந்து 220 கி.மீ., சென்னையிலிருந்து 270 கி.மீ. திருச்சியிலிருந்து 165 கி.மீ. மதுரையிலிருந்து 340 கி.மீ.
வரிசை எண் : 161
சிறப்பு : காவிரிக்கு வலப்புறமாக இருப்பதால் வலம்புரம் என்று பெயர். திருமால் வழிபட்டு வலம்புரிச் சங்கைப் பெற்ற தலம். இது ஒரு மாடக் கோயில்.
இறைவன்: வலம்புரநாதர்
இறைவி : வடுவகிர்க்கண்ணி
தலமரம் : பனை
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வலம்புரநாதர் திருக்கோயில், மேலப் பெரும்பள்ளம், மேலையூர் அஞ்சல் – 609 107 மயிலாடுதுறை RMS, தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.30 – 11.00 ; மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : 04364-200890

இருப்பிட வரைபடம்


நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்டப புன்சடையினானே
அனைத்துடன் கொண்டு வந்து அன்பினால் அமைய ஆட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணரமாட்டேன்
எனக்கு நான் செய்வதென்னே இனிவலம் புரவனீரே
பாடல் கேளுங்கள்
 நினைக்கின்றேன் நெஞ்சு


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க