அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 251 கி.மீ., திருவிஜயமங்கையிலிருந்து மேலும் 2 கி.மீ. சென்றால் இக்கோயில்.
கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 245 கி.மீ., சென்னையிலிருந்து 295 கி.மீ.
திருச்சியிலிருந்து 106 கி.மீ. மதுரையிலிருந்து 237 கி.மீ.
வரிசை எண் : 102
சிறப்பு : சிவராத்திரி அன்று புலிக்குப் பயந்து வில்வ மரத்தின் மீதேறிய வேடன் ஒருவன் இரவு முழுதும்
தூங்காமல் இருப்பதற்காக அம்மரத்தின் இலைகளைப் பறித்து கீழே எறிய அந்த இலைகள் கீழே இருந்த
சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் மகிழ்ந்த இறைவன் அவனுக்கு அருள் புரிந்ததாக வரலாறு.
இயமன் வேடனை அணுகாமல் இருப்பதற்காக இத்தலத்து நந்தி திரும்பியிருப்பதைக் காணலாம்.
இக்கோயிலில் துவாரபாலகர்களும், நவகிரங்களும் இல்லை. சிவராத்திரி அன்று வேடனுக்குக் காட்சி
கொடுப்பதற்காக இறைவனும் இறைவியும் வேடுவ வடிவத்தில் வீதி உலா வருகின்றனர்.
இறைவன்: வில்வவனேஸ்வரர், வில்வவனநாதர்
இறைவி : சர்வஜனரட்சகி, வளைக்கைநாயகி
தலமரம் : வில்வ மரம்
தீர்த்தம் : எம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வில்வவனேஸ்வரர் திருக்கோயில், திருவைகாவூர் & அஞ்சல் – 612 304,
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ;மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 0435-2941912, 98436066985, 9444030158
இருப்பிட வரைபடம்
|