banner
சோழநாடு - திருவையாறு

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 282 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 38 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 335 கி.மீ. திருச்சியிலிருந்து 51 கி.மீ. மதுரையிலிருந்து 182 கி.மீ.
வரிசை எண் : 105
சிறப்பு : வாகீசர் (அப்பர்) பெருமான் கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த தலம். இந்த அற்புத நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று இத்தலத்திலே விழாவாகக் கொண்டாடுகிறார்கள். சப்த தானங்களுள் இது ஒன்று. வெளிப் பிராகாரத்தின் கோடியில் ஒலி கேட்கும் இடம் என்று எழுதி உள்ள இடத்தில் நின்று உரத்த குரலில் ஐயாறா என அழைத்தால் அவ்வொலி பல முறை ஒலிப்பதைக் கேட்கலாம். அப்பரின் ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற வாக்கு ஈண்டு சிந்திக்கத் தக்கது. மூலவருக்கு அருகில் மரகத லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. நந்தியெம்பெருமானுக்குத் திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது. இதனைத் சப்த ஸ்தானத் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். அப்போது ஐயாறப்பரும் நந்தியெம்பெருமானும் புறப்பட்டு ஏழு தலங்களுக்கும் செல்வர். அப்போது அந்தந்த தலத்து இறைவர்களும் இவர்களை எதிர்கொண்டழைத்து உடன் செல்வர். திருக்கோயிலின் மேற்கு கோபுர வாயிலின் வலப்பக்கம் உள்ள வீதியின் கோடியில் அப்பர் எழுந்தருளிய அப்பர் குளம் (உப்பங்குளம்) உள்ளது.
இறைவன்: பஞ்சநதேஸ்வரர், ஐயாற்றீசர்
இறைவி : தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி
தலமரம் : வில்வம் மரம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம் அஞ்சல் – 614 204, (வழி) திருவையாறு, தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 11.00 ;மாலை 05.00 – 07.00
தொடர்புக்கு : 04362-326668

இருப்பிட வரைபடம்


எல்லா உலாமும் ஆனாய் நீயே 
 ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே 
 ஞானச்சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
 புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே 
 திருவையாறு அகலாத செம்பொற்சோதீ
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 எல்லா உலாமும் ஆனாய்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க