banner
சோழநாடு - திருத்தெளிச்சேரி (கோயில்பத்து)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 246 கி.மீ. காரைக்கால் நகரில் கோயில்பத்து என்ற இடத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரில் செல்லும் சாலையில் சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 245 கி.மீ., சென்னையிலிருந்து 290 கி.மீ. திருச்சியிலிருந்து 164 கி.மீ. மதுரையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 167
சிறப்பு : இத்தலத்திற்குச் சமீவனம் என்ற பெயரும் உண்டு. சிறிய கோயில். பிரமன் வழிபட்ட தலம். புத்த நந்தியின் தலையில் இடி விழச் செய்த தலம்.
இறைவன்: பார்வதீஸ்வரர், சமீவனேஸ்வரர்
இறைவி : பார்வதியம்மை, சத்தியம்மை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : தேவ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பார்வதீஸ்வரர் திருக்கோயில், கோயில்பத்து, காரைக்கால் & அஞ்சல் – 609 602 புதுவை மாநிலம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 09.00
தொடர்புக்கு : 9786635559, 9994345452

இருப்பிட வரைபடம்


திக்குலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம்செல்வனை
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லவர்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே
பாடல் கேளுங்கள்
 திக்குலாம் பொழில்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க