அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 273 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில்
ஆலத்தம்பாடி வந்து அங்கிருந்து சித்தாய்மூர் செல்லும் பாதையில் 3 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 271 கி.மீ.,
சென்னையிலிருந்து 316 கி.மீ. திருச்சியிலிருந்து 95 கி.மீ. மதுரையிலிருந்து 224 கி.மீ.
வரிசை எண் : 223
சிறப்பு : பிரமரிஷி சித்தர்கள் வழிபட்ட தலம். செட்டிப் பெண் ஒருத்தியின் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தைப் போக்கும் முகமாக
இறைவன் சில அற்புதங்களை இங்கு நிகழ்த்தியுள்ளான். கோயிற் கதவு தானே திறக்கச் செய்தும், ஆத்தி மரத்தை இடம் பெயர
வைத்தும், நந்தி தேவரை பலி பீடத்துக்குப் பின்னே போகச் செய்தும் காட்டி அவள் குற்றமற்றவள் என்பதை அறிவுறுத்தினார்.
கோயிலில் ஒரு தேன் கூடு உள்ளது. பிரமரிஷி தேனீ உருவில் சென்று இறைவனை வழிபட்டு அங்கேயே தங்கி விட்டார் என்று சொல்லப்படுகிறது.
இறைவன்: சுவர்ணஸ்தாபனேஸ்வரர், பொன்வைத்தநாதர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தலமரம் : ஆத்தி
தீர்த்தம் : சுவர்ணபுஷ்கரணி
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சுவர்ணஸ்தாபனேஸ்வரர் திருக்கோயில்,
சித்தாய்மூர் & அஞ்சல் – 610 203,
பொன்னிரை s.o
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.30 – 11.30 ; மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 04366-247846, 9442767565
இருப்பிட வரைபடம்
|