அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 231 கி.மீ., சீர்காழியிலிருந்து 11 கி.மீ. வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து
திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் சாலையின் இடப்புறத்தில் திருப்புன்கூர் சிவலோகநாதசுவாமி
திருக்கோயில் என்ற வளைவு இருக்கும். அதனுள் 1 கி.மீ. சென்றால் கோயில். இந்த வளைவுக்கு எதிரில் செல்லும்
சாலையில் 1 கி.மீ. சென்றால் ஏயர்கோன் கலிக்காம நாயனாருடைய அவதாரத்தலமான திருபெருமங்கலம் உள்ளது.
திருப்புன்கூர் இந்த நாயனார் வழிபட்ட தலமும் ஆகும். செங்கல்பட்டிலிருந்து 194 கி.மீ., சென்னையிலிருந்து 244 கி.மீ.
திருச்சியிலிருந்து 140 கி.மீ. மதுரையிலிருந்து 274 கி.மீ.
வரிசை எண் : 74
சிறப்பு : நந்தனாருக்காக நந்தி விலகிய தலம். கோயில் இருக்கும் சந்நிதி தெருவின் ஆரம்பத்தில் சிறிய
நந்தனார் சந்நிதியைக் காணலாம். இங்கு நின்றுகொண்டு பார்த்தால் மூலத்தானம் தெரியும். நந்தனார் வெட்டிய
திருக்குளம் திருப்புன்கூரில் உள்ளது. இதற்குத் துணை புரிந்தவர் இத்தலத்து விநாயகர். இவருக்குக் குளம்
வெட்டிய விநாயகர் என்றே பெயர்.
இறைவன்: சிவலோகநாதர்
இறைவி : சொக்கநாயகி, சௌந்தரநாயகி
தலமரம் : புங்கமரம்
தீர்த்தம் : கணபதி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர் & அஞ்சல் – 609 112
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 04364-279784
இருப்பிட வரைபடம்
|