அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 259 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர்
சாலையில் சன்னாநல்லூர் வந்து சாலையோரத்தில் உள்ள வளைவில் திரும்பி 10 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து
257 கி.மீ., சென்னையிலிருந்து 302 கி.மீ. திருச்சியிலிருந்து 146 கி.மீ. மதுரையிலிருந்து 290 கி.மீ.
வரிசை எண் : 192
சிறப்பு : சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. உயிர்கள் இறைவன் திருவடியைப் புகலாக அடையும் தலம். சித்திரைச்
சதயத்தில் அப்பர் பெருமான் இறைவன் திருவடியை அடைந்த தலம். முருகநாயனார் அவதாரத்தலம். சுந்தரருக்கு செங்கற்களைப்
பொன்னாக இறைவன் மாற்றித் தந்தருளிய தலம். இத்தலத்தில் உள்ள மடத்தில் முருக நாயனார், சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர்
கூடியிருந்து மகிழ்ந்துள்ளனர் என்ற செய்தி பெரியபுராணத்தில் உள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பட்ட கோயில். அகழியே தீர்த்தமாக உள்ளது.
இறைவன்: அக்னீபுரீஸ்வரர், கோணப்பிரான்
இறைவி : சூளிகாம்பாள், கருந்தார்குழலி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. அக்னீபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருப்புகலூர் & அஞ்சல் – 609 704
(வழி) கண்ணபுரம்
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.30 – 09.00
தொடர்புக்கு : 04366-292300
இருப்பிட வரைபடம்
|