அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 245 கி.மீ., கும்பகோணத்திலிருந்து திருவையாறு சாலையில் புளியஞ்சேரி
சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் கொட்டையூர். அதே சாலையிலேயே தொடர்ந்து மேலும் 3 கி. மீ.
சென்றால் இக்கோயில். கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 239 கி.மீ.,
சென்னையிலிருந்து 289 கி.மீ. திருச்சியிலிருந்து 100 கி.மீ. மதுரையிலிருந்து 231 கி.மீ.
வரிசை எண் : 100
சிறப்பு : செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்னதால் இறைவனுக்கு சாட்சி நாதர் என்ற பெயரும் உண்டு.
பிரளயத்திற்குப் புறம்பாயிருந்ததால் புறம்பியம் என்ற பெயர்.
இறைவன்: சாட்சீஸ்வரர், சாட்சிநாதேஸ்வரர், புன்னைவனநாதர்
இறைவி : கரும்பன்னசொல்லி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்,
திருப்புறம்பியம் & அஞ்சல் – 612 303,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ;மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2000157
இருப்பிட வரைபடம்
|