banner
சோழநாடு - திருப்பழுவூர் (கீழப்பழுவூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 302 கி.மீ., திருச்சி – அரியலூர் சாலையில் மழபாடியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 292 கி.மீ., சென்னையிலிருந்து 355 கி.மீ. திருச்சியிலிருந்து 71 கி.மீ. மதுரையிலிருந்து 202 கி.மீ. பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.
வரிசை எண் : 109
சிறப்பு : பழு என்றால் ஆல். ஆல் தலமரமாதலின் பழுவூராயிற்று. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீரும் பொருட்டு வழிபட்ட தலம். முதலாம் பராந்தகச்சோழன் திருப்பணிகள் செய்துள்ளான். பழுவேட்டரையர்கள் திருப்பணி செய்த கோயிலும் இத் தலத்தில் உள்ளது
இறைவன்: வடமூலேஸ்வரர், யோகவனேஸ்வரர்
இறைவி : அருந்தவநாயகி
தலமரம் : ஆல்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வடமூலேஸ்வரர் திருக்கோயில், கீழப்பழுவூர் & அஞ்சல் – 621 707 அரியலூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 9786163399

இருப்பிட வரைபடம்


முத்தன் மிகு மூவிலைமேல் நல்வேலன் விரிநூலன்
அத்தன் எமை ஆளுடைய அண்னல் இடமென்பர்
மைத்தழை பெரும் பொழிலன் வாசம் அதுவீசப்
பத்தரொடு சித்தர் பயில்கின்ற ஊரே
			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 முத்தன் மிகு மூவிலை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க