அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 237 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில்
கங்களாஞ்சேரி வந்து இடப்புறம் செல்லும் நாகப்பட்டினம் சாலையில் திருவிற்குடியிலிருந்து இடப்புறம் செல்லும் சாலையில் 2 கி.மீ.
சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 238 கி.மீ., சென்னையிலிருந்து 280 கி.மீ. திருச்சியிலிருந்து 94 கி.மீ. மதுரையிலிருந்து
265 கி.மீ.
வரிசை எண் : 195
சிறப்பு : பைரவ மகரிஷி வழிபட்ட தலம். இங்குள்ள தீர்த்தம் கண் நோயைப் போக்க வல்லது என்பர். வணிகன் ஒருவனுக்குப்
பயற்று மூட்டைகளைத் தந்து உதவிய காரணத்தால் இறைவன் பயற்றுநாதர் எனப்பட்டார்.
இறைவன்: முக்தபுரீஸ்வரர், பயற்றுநாதர்
இறைவி : நேத்ராம்பிகை, காவியங்கண்ணி
தலமரம் : சிலந்தி
தீர்த்தம் : கருணா தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. முக்தபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருப்பயத்தங்குடி & அஞ்சல் – 609 701
(வழி) கங்களாஞ்சேரி
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 11.00 ; மாலை 06.00 – 07.30
தொடர்புக்கு : 04366-272423
இருப்பிட வரைபடம்
|