அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 246 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து
தரங்கம்பாடி சாலையில் செம்பொனார்கோயிலைத் தாண்டி நல்லாடை என்னு ஊர் வழியாக 6 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து
266 கி.மீ., சென்னையிலிருந்து 316 கி.மீ. திருச்சியிலிருந்து 106 கி.மீ. மதுரையிலிருந்து 236 கி.மீ.
வரிசை எண் : 158
சிறப்பு : அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. தக்கனை அழித்த தலம். சிறிய கிராமம். தக்கன் யாகம் செய்த தலம்.
உற்சவ சம்கார மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப் போல் சிற்பம் உள்ளது. இதைத் தகட்டால் மூடி
வைத்துள்ளனர். கேட்டுக்கொண்டால் சிவாசாரியார் திறந்து காட்டுவார். நவகிரகங்கள் இல்லை.
இறைவன்: வீரட்டேஸ்வரர், தட்சபுரீஸ்வரர்
இறைவி : இளங்கொம்பனையாள்
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : உத்தரவேதி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,
கீழ்ப்பரசலூர் – பரசலூர் அஞ்சல் – 609 309
(வழி) செம்பொனார்கோயில்,
தரங்கம்பாடி வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 04364-281197, 9943862486, 04364-205555
இருப்பிட வரைபடம்
|