banner
சோழநாடு - திருப்பராய்த்துறை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 315 கி.மீ., திருச்சியிலிருந்து கரூர், ஈரோடு சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். செங்கல்பட்டிலிருந்து 295 கி.மீ., சென்னையிலிருந்து 345 கி.மீ. மதுரையிலிருந்து 170 கி.மீ.
வரிசை எண் : 120
சிறப்பு : இத்தலத்திற்குத் தாருகாவனம் என்ற பெயரும் உண்டு. பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் பராய்த்துறை எனப்டுகிறது. இறைவன் பிட்சாடனர் உருவில் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய தலம்.
இறைவன்: தாருகாவனேஸ்வரர், பராய்த்துறைநாதர்
இறைவி : பசும்பொன்மயிலாம்பாள், ஹேமவர்ணாம்பாள்
தலமரம் : பராய் மரம்
தீர்த்தம் : காவிரி
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. தாருகாவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பராய்த்துறை & அஞ்சல் – 639 115, கரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ;மாலை 04.30 – 09.00
தொடர்புக்கு : 04323-225228

இருப்பிட வரைபடம்


தொண்டு பாடியும் தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி ஏத்தியும்
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடியேன் உய்ந்துபோவனே
				- அப்பர்
பாடல் கேளுங்கள்
 தொண்டு பாடியும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க