அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 285 கி.மீ., திருவையாறிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில்
7 கி.மீ.ல் உள்ளது. தஞ்சையிலிருந்து வருபவர்கள் திருக்கண்டியூரிலிருந்து இடபக்கம் செல்லும் சாலையில்
3 கி.மீ. செல்லவேண்டும். சாலையோரக் கோயில். செங்கல்பட்டிலிருந்து 305 கி.மீ.,
சென்னையிலிருந்து 360 கி.மீ. மதுரையிலிருந்து 195 கி.மீ.
வரிசை எண் : 128
சிறப்பு : சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம். அதனால் இத் தலத்தை
மிதிக்க அஞ்சிய சம்பந்தர் கோயிலுக்கு வெளியே இருந்தவாறே தரிசனம் செய்ததால் அவருக்காக இங்கு நந்தி
விலகியிருப்பதைக் காணலாம். திருஞானசம்பந்தர் பல்லக்கில் இங்கு வந்தபோது அதனைச் சுமந்து
வந்தவர்களில் அப்பரும் ஒருவர். அந்த இடம் சம்பந்தர் மேடு என்று அழைக்கப்படுகிறது. அப்பர் அமைத்த
திருமடம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. கோயில் மேலைப்பூந்துருத்தியில் உள்ளது. உட் பிராகாரத்தில்
சுவற்றில் அப்பர் பெருமானின் வரலாற்றுக் காட்சிகளைச் சித்திரமாக வடித்துள்ளார்கள்.
இறைவன்: புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்
இறைவி : சௌந்தரநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பந்துருத்தி & அஞ்சல் – 613 103, (வழி) திருக்கண்டியூர்,
திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9486671417
இருப்பிட வரைபடம்
|