banner
சோழநாடு - திருப்பனையூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 233 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் சன்னாநல்லூர் வந்து திருமருகல் சாலையில் வலப்புறம் செல்லும் கோணமதி என்னும் இடத்தில் இடத்தில் பிரியும் சாலையில் சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 234 கி.மீ., சென்னையிலிருந்து 274 கி.மீ. திருச்சியிலிருந்து 90 கி.மீ. மதுரையிலிருந்து 261 கி.மீ.
வரிசை எண் : 190
சிறப்பு : சப்த ரிஷிகள் பராசர முனிவர், கரிகாற்சோழன் வழிபட்ட தலம். தலமரங்களாக இரண்டு பனை மரங்கள் உள்ளன.
இறைவன்: சௌந்தரேஸ்வரர், அழகியநாதர்
இறைவி : பிரஹந்நாயகி, பெரியநாயகி
தலமரம் : பனை
தீர்த்தம் : பராசர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், பனையூர், சன்னாநல்லூர் அஞ்சல் – 609 504 நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 09.00 ; மாலை 05.00 – 07.00
தொடர்புக்கு : 04366-237007

இருப்பிட வரைபடம்


அணியார் தொழவல்லவர் ஏத்த
மணியார் மிடறொன்று உடையானூர்
தணியார் மலர் கொண்டு இருபோதும்
பணிவர் பயிலும் பனையூரே
      - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 அணியார் தொழவல்லவர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க