banner
சோழநாடு - திருப்பாம்புரம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 250 கி.மீ. கும்பகோணம் – பேரளம் சாலையில் கற்கத்தி வந்து அங்கிருந்து 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 238 கி.மீ., சென்னையிலிருந்து 283 கி.மீ. திருச்சியிலிருந்து 127 கி.மீ. மதுரையிலிருந்து 293 கி.மீ.
வரிசை எண் : 176
சிறப்பு : நாகராஜன் வழிபட்ட தலம். பாம்பு+புரம் பாம்புரம் என்றானது. நாகதோஷம், இராகு, கேது தோஷங்களுக்குப் பிரார்த்தனைத் தலம். இந்த்த் தலத்தில் பாம்பு கடித்து இறப்பவர்கள் இல்லை.
இறைவன்: பாம்புரேஸ்வரர், சேஷபுரீஸ்வரர்
இறைவி : பிரமராம்பிகை, வண்டார்குழலி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பாம்புரேஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம், சுரைக்காயூர் அஞ்சல் – 612 203 (வழி) பாலையூர் குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.45 ; மாலை 04.00
தொடர்புக்கு : 9486279221, 9443943665

இருப்பிட வரைபடம்


ஓதி நன்குணர்வார்க்கு உணர்வுடை ஒருவர்
 ஒளிதிகழ் உருவம் சேர் ஒருவர்
மாதினை இடமா வைத்த எம்வள்ளல்
 மான்மறி ஏந்திய மைந்தர்
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய
 அலைகடல் கடைய அன்றெழுந்த
பாதி வெண்பிறை சடை வைத்த எம்பரமர்
 பாம்புர நன்னகராரே 
பாடல் கேளுங்கள்
 ஓதி நன்கு


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க