banner
சோழநாடு - திருப்பைஞ்ஞீலி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 317 கி.மீ., திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் சாலையில் 17 ஆவது கி.மீ. சமயபுரம் மாரியம்மன் கோயில் எதிரே செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 297 கி.மீ., சென்னையிலிருந்து 352 கி.மீ. மதுரையிலிருந்து 148 கி.மீ.
வரிசை எண் : 115
சிறப்பு : ஞீலி என்பது ஒருவகை வாழை. இந்த ஞீலி தலமரமாக இருப்பதால் திருப்பைஞ்ஞீலி என்ற பெயர். அப்பர் பெருமானுக்கு இறைவன் பொதி சோறு அளித்து ஆட்கொண்ட தலம்.
இறைவன்: நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர்
இறைவி : விசாலாட்சி
தலமரம் : ஞீலி வாழை
தீர்த்தம் : அப்பர் தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி & அஞ்சல் – 621 005 திருச்சி வட்டம், திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0431-2061400

இருப்பிட வரைபடம்


மத்தமாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்
பத்தர்தாம் தொழுதேத்து பைஞ்ஞீலி எம்
அத்தனைத் தொழவல்லவர் நல்லரே
			- அப்பர்
பாடல் கேளுங்கள்
 மத்த மாமலர் சூடிய


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க