banner
சோழநாடு - திருநெல்லிக்கா

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 252 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து 14 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 322 கி.மீ. திருச்சியிலிருந்து 112 கி.மீ. மதுரையிலிருந்து 242 கி.மீ.
வரிசை எண் : 234
சிறப்பு : நெல்லி மரங்கள் அதிகம் இருந்த தலம். சூரியன், பிரம்மா, திருமால், சனி வழிபட்ட தலம். துருவாசமுனிவரின் கோபம் நீக்கியருளப்பட்ட தலம்.
இறைவன்: ஆம்லகேஸ்வரர், நெல்லிவனநாதர், நெல்லிவனேஸ்வரர்
இறைவி : ஆம்லகேஸ்வரி, மங்களநாயகி
தலமரம் : நெல்லி
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. நெல்லிவனேஸ்வரர் திருக்கோயில், திருநெல்லிக்காவல் அஞ்சல் – 610 205, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 11.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04369-237624, 9786152928

இருப்பிட வரைபடம்


மறைத்தான் பிணிமாதொரு பாகம்தன்னை
மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே
        - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மறைத்தான் பிணிமாதொரு


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க