banner
சோழநாடு - திருநீலக்குடி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 240 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 280 கி.மீ. செல்லவேண்டும். கும்பகோணம் காரைக்கால் சாலையில் 5 கி.மீ. ல் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 265 கி.மீ., சென்னையிலிருந்து 315 கி.மீ. திருச்சியிலிருந்து 85 கி.மீ. மதுரையிலிருந்து 210 கி.மீ.
வரிசை எண் : 149
சிறப்பு : நஞ்சினை உண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளிய தலம். அதனால் திருநீலக்குடி எனப்பெயர் பெற்றது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். இறைவருக்குத் தைல அபிஷேகம் விசேஷமானது. எவ்வளவு எண்ணெய் வார்த்தாலும் வெளியே வழியாது
இறைவன்:மனோக்ஞ நாதசுவாமி, நீலகண்டேஸ்வரர்
இறைவி : அநூபமஸ்தனி
தலமரம் : பஞ்சவில்வம்
தீர்த்தம் : ஐந்து தீர்த்தங்கள்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. மனோக்ஞ நாதசுவாமி திருக்கோயில், திருநீலக்குடி & அஞ்சல் – 612 108 (வழி) கும்பகோணம் திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2470215, 9443463119

இருப்பிட வரைபடம்


கல்லினோடு எனைப்பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர் புகநூக்க என் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே
பாடல் கேளுங்கள்
 கல்லினோடு எனைப்பூட்டி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க