banner
சோழநாடு - திருநெடுங்களம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 315 கி.மீ., திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 10 கி.மீ. பயணம் செய்து துவாக்குடி வந்து அங்கிருந்து இடப்பக்கம் செல்லும் சாலையில் 5 ஆவது கி.மீ. ல் உள்ளது. திருவெறும்பியூரிலிருந்து 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 335 கி.மீ., சென்னையிலிருந்து 385 கி.மீ. மதுரையிலிருந்து 165 கி.மீ.
வரிசை எண் : 125
சிறப்பு : அகத்தியர் வழிபட்டது
இறைவன்: நெடுங்களநாதர், நித்யசுந்தரேஸ்வரர்
இறைவி : மங்களநாயகி, ஒப்பிலா நாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. நித்யசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருநெடுங்களம் & அஞ்சல் – 620 015, திருச்சி வட்டம், திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ;மாலை 04.30 - 07.30
தொடர்புக்கு : 0431-2520126, 9443745009, 9842028774

இருப்பிட வரைபடம்


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசின்னல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மறையுடையாய் தோலுடையாய்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க