banner
சோழநாடு - திருநறையூர் சித்தீச்சரம் (திருநறையூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 272 கி.மீ. நாச்சியார்கோயிலிலிருந்து எரவாஞ்சேரி முன்பாக உள்ள தலம். செங்கல்பட்டிலிருந்து 252 கி.மீ., சென்னையிலிருந்து 292 கி.மீ. திருச்சியிலிருந்து 134 கி.மீ. மதுரையிலிருந்து 262 கி.மீ
வரிசை எண் : 182
சிறப்பு : ஊர் - திருநறையூர். கோயில் – சித்தீச்சரம். பிரமன் வழிபட்ட தலம். இராஜகோபுரத்தில் நிறைய சிற்பங்கள்.
இறைவன்: சித்தநாதேஸ்வரர், நரேஸ்வரர், சித்தநாதர்
இறைவி : சௌந்தரநாயகி, அழகம்மை
தலமரம் : பவளமல்லி
தீர்த்தம் :சூல தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர், நாச்சியார்கோயில் அஞ்சல் – 612 102 கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 0435-2467343

இருப்பிட வரைபடம்


நீடவல்ல நிமிர்புன்சடை தாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சரமே தெளி நெஞ்சே 
பாடல் கேளுங்கள்
 நீடவல்ல நிமிர்புன்சடை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க