banner
சோழநாடு - திருநல்லூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 270 கி.மீ., தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வலங்கைமானுக்குப் பிரிகின்ற சாலையில் 3 கி.மீ சென்றால் இத் தலம். பாபநாசத்திலிருந்து 5 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 290 கி.மீ., சென்னையிலிருந்து 340 கி.மீ. திருச்சியிலிருந்து 92 கி.மீ. மதுரையிலிருந்து 220 கி.மீ.
வரிசை எண் : 137
சிறப்பு : திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு இறைவன் திருவடி சூட்டியருளிய தலம். இது ஒரு மாடக்கோயில். அமர்நீதி நாயனாரை ஆட்கொண்ட தலம். இத் தலத்தைத் தென் கயிலாயம் என்றும் கூறுவர். அப்பர் சுவாமிகள் திருச்சத்திமுற்றத்தில் தனக்குத் திருவடி சூட்டுமாறு வேண்ட “நல்லூருக்கு வா உம் நினைப்பதனை முடிப்போம்” என இறைவன் கூறி இந்த தலத்திலே அவருக்குத் திருவடி தீட்சை அளிக்கிறார். அமர்நீதி நாயனார் துலையில் (தராசு) ஏறிய தலம் இது. அந்த துலா மண்டபம் இன்றும் காணலாம். இறைவன் திருமேனி எங்கும் காணாத சிறப்பு உடையது. காலை தொடங்கி மாலை முடிய 12 மணி நேர இடைவெளியில் ஐந்து முறை சிவலிங்கம் நிறம் மாறுகிறது. 6 நாழிகைக்கு ஒரு முறை அதாவது 144 நிமிடத்திற்கு ஒரு முறை { 1 நாழிகை = 24 நிமிடம் ) சுவாமி நிறம் மாறுகிறார். அவ்வாறு ஐந்து முறை நிகழ்கிறது. இதே போல் திருக்கயிலையிலும் காணலாம். இதனால் இறைவருக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயர். அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய தலம். இங்குள்ள திருக்குளத்தில் நீராடினால் ஏழு கடல்களிலும் நீராடிய பலன் கிடைக்கும். இத் தீர்த்தத்தில் நீராடி குந்தி தேவி தன் பாவங்களைப் போக்கிக்கொண்டாள். குளக்கரையில் அமர்நீதி நாயனாரின் மடாலயம் உள்ளது.
இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி : கிரிசுந்தரி, கல்யாணசுந்தரி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருநல்லூர் கிராமம் & அஞ்சல் – 614 208 (வழி) சுந்தரப்பெருமாள் கோயில், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 01.00 ;மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 9363141676

இருப்பிட வரைபடம்


நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்துவானோர்
இனந்துருவி மணிமகுடத்தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்
நல்லூர் எம்பெருமானர் நல்லவாறே- அப்பர்
பாடல் கேளுங்கள்
 நினைந்துருகும் அடியாரை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க