banner
சோழநாடு - திருநாகேஸ்வரம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து அணைக்கரை வழியாக 239 கி.மீ., சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 279 கி.மீ. சென்றால் இத் தலம். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. ல் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 264 கி.மீ., சென்னையிலிருந்து 314 கி.மீ. திருச்சியிலிருந்து 84 கி.மீ. மதுரையிலிருந்து 214 கி.மீ.
வரிசை எண் : 146
சிறப்பு : சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. இக்கோயிலைப் போன்றே அவர் தம் ஊரான குன்றத்தூரில் இதே பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார். இராகு வழிபட்ட தலம். இராகு தோஷம் உடையவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்வது வழக்கம். இரண்டாம் பிராகாரத்தில் நாகராஜனின் உருவமுள்ளது. சேக்கிழார், அவரது தம்பி மற்றும் தாயார் சிலைகள் உள்ளன. இக்கோயில் கண்டராதித்த சோழன் கட்டியதாக வரலாறு. இறைவருக்குப் பால் அபிடேகம் செய்தால் அப்பால் நீல நிறமாகிவிடுகிறது. இக்கோயிலுக்கு அருகில் ஒப்பிலியப்பன் வைணவத் தலம் உள்ளது.
இறைவன்:நாகேஸ்வரர், நாகநாதர்
இறைவி : கிரிகுஜாம்பிகை, குன்றாமுலையம்மை
தலமரம் : சண்பகம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் & அஞ்சல் – 612 204 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ;மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 0435-2430349

இருப்பிட வரைபடம்


நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லிலோடு கையேந்திப் பலிதிரி
செல்வர் போற்றிரு நாகேச்சரவரே
பாடல் கேளுங்கள்
 நல்லர் நல்லதோர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க