banner
தென் திருமுல்லைவாயில் (திருமுல்லைவாசல்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 227 கி.மீ., கொள்ளிடத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. சீர்காழியிலிருந்து 13 கி.மீ. மயேந்திரபள்ளியிலிருந்து முதலைமேடு வழியாக 6 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 217 கி.மீ., சென்னையிலிருந்து 267 கி.மீ. திருச்சியிலிருந்து 195 கி.மீ. மதுரையிலிருந்து 322 கி.மீ.
வரிசை எண் : 61
சிறப்பு : சோழ மன்னன் குதிரையின் கால்களை முல்லைக் கொடி சுற்றிகொள்ள அதனை மன்னன் வெட்டியபோது அங்கே இரத்தம் சிதறக் கண்டான். கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கே சிவலிங்கம் கண்டான். மன்னன் தன் தவறு உணர்ந்து அங்கே இறைவனுக்கு ஒரு கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இறைவன் திருமேனியில் வெட்டுப்பட்ட தழும்பைக் காணலாம்.
இறைவன்: முல்லைவனேஸ்வரர், முல்லைவனநாதர்
இறைவி : சத்யானந்த சௌந்தரி, கோதையம்மை
தலமரம் : முல்லை
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. முல்லைவனநாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் & அஞ்சல் – 609 113 (வழி) சீர்காழி, சீர்காழி வட்டம் நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ;மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 9486339538

இருப்பிட வரைபடம்


நெஞ்சார நீடு நினைவாரை முடு வினைதேய நின்றநிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனியரனூர்
மஞ்சாரு மாடமனை தோறும் ஐயம் உளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே
 							- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 நெஞ்சார நீடு நினைவாரை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க