banner
சோழநாடு - திருமழபாடி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 292 கி.மீ., திருவையாற்றிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் திருமானூர் அடுத்து 5 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 282 கி.மீ., சென்னையிலிருந்து 345 கி.மீ. திருச்சியிலிருந்து 61 கி.மீ. மதுரையிலிருந்து 192 கி.மீ.
வரிசை எண் : 108
சிறப்பு : மழவர்கள் ஆண்ட பகுதி என்பதால் மழபாடி எனப்பட்டது. மார்க்கண்டேய முனிவர் பொருட்டு இறைவன் மழு ஏந்தி நடனமாடியதால் மழுவாடி எனப் பெயர் பெற்று பின்னர் மழபாடி என்றானது என்று கூறுகிறது தலபுராணம். நந்தியெம்பெருமானுக்குத் திருமணம் நிகழ்ந்த இடம். சுந்தரரை அவர் கனவில் மழபாடி வர மறந்தனையோ என்று இறைவன் கேட்ட தலம். ஒரே கல்லில் அமைந்த சோமாஸ்கந்தர் சிலை மிக அழகு. கொள்ளிட நதி இங்கே வடக்கு நோக்கி ஓடுகிறது. இங்கு நவக்கிரகங்கள் இல்லை. இத் தலத்திற்குப் பல கல்வெட்டுக்கள் உள்ளன.
இறைவன்: வைத்தியநாதர், வைரத்தூண்நாதர், வஜ்ஜிரதம்பேஸ்வரர்
இறைவி : சுந்தராம்பிகை, அழகம்மை, பாலாம்பிகை
தலமரம் : பனை
தீர்த்தம் : இலக்குமி தீர்த்தம், கொள்ளிடம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வஜ்ஜிரதம்பேஸ்வரர் திருக்கோயில், திருமழபாடி & அஞ்சல் – 621 851 அரியலூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.30 ;மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 04329-292890, 9443623014

இருப்பிட வரைபடம்


பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரைநினைக்கேனே
					- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பொன்னார் மேனியனே


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க