அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 268 கி.மீ. திருச்செங்காட்டங்குடியிலிருந்து 3 கி.மீ.
திருப்புகலூரிலிருந்து 3 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 266 கி.மீ., சென்னையிலிருந்து 311 கி.மீ. திருச்சியிலிருந்து 153 கி.மீ.
மதுரையிலிருந்து 301 கி.மீ.
வரிசை எண் : 197
சிறப்பு : மருகல் என்பது ஒருவகை வாழை. கல் வாழை என்றும் இதனைக் கூறுகின்றனர். மாடக் கோயில். பாம்பு கடித்து இறந்த
செட்டி மகனை சம்பந்தர் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்த தலம். அவனுக்கும் செட்டிப் பெண்ணுக்கும் இங்குள்ள வன்னி மரத்தின்
அடியில்தான் சம்பந்தர் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அம்பாள் சந்நிதியின் எதிரில் உள்ள தெற்கு வீதியின்
கோடியில் ஒரு மடம் உள்ளது. இம்மடத்தில்தான் செட்டி மகனும் செட்டிப் பெண்ணும் படுத்து உறங்கினர் என்று சொல்லப்படுகிறது.
இறைவன்: மாணிக்கவண்ணர், இரத்தினகிரீஸ்வரர்
இறைவி : வண்டுவார்குழலி, ஆமோதாளகநாயகி
தலமரம் : வாழை
தீர்த்தம் : மாணிக்க தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்,
திருமருகல் & அஞ்சல் – 609 702
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 04366-270823
இருப்பிட வரைபடம்
|