banner
சோழநாடு - திருமறைக்காடு (வேதாரண்யம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாய்மூரிலிருந்து 40 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 242
சிறப்பு : சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இராமர் இங்கு வ்ழிபட்டதாக கூறப்படுகிறது. சேரமான்பெருமாள் நாயனார் சுந்தரருடன் வழிபட்ட தலம். விளக்கைத் தூண்டிய எலிக்கு அருள் புரிந்து மாவலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருளிய தலம். இத்தலத்து கோயில் வாயிலை பதிகம் பாடி அடைப்பித்தார் சம்பந்தர் சுவாமிகள். திறப்பித்தார் அப்பர் சுவாமிகள். விளக்கு அழகிற்கு வேதாரண்யம் என்பர். தூண்டு சுடரனைய சோதி கண்டாய் என்பார் அப்பர். பரஞ்சோதி முனிவர், தாயுமானவர் அவதாரத்தலம். அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டியருளிய தலம். நவக்கிரகங்கள் வரிசையில் உள்ளன.
இறைவன்: மறைக்காட்டீஸ்வரர், வேதாரண்யஸ்வரர், வேதாரண்யநாதர்
இறைவி : வீணாவாதவிதூஷணி, யாழைப்பழித்த மொழியம்மை
தலமரம் : வன்னி மரம்
தீர்த்தம் : வேத தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு வேதாரண்யநாதர் திருக்கோயில், வேதாரண்யம் & அஞ்சல் – 614 810, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 04369-250238

இருப்பிட வரைபடம்


பண்ணின் நேர்மொழியாள் உமைபங்கரோ
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக்காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்து அருள்செய்ம்மினே 
         - அப்பர்


பாடல் கேளுங்கள்
 பண்ணின் நேர்மொழியாள்


Zoomable Image
>
சோழநாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க