அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-எட்டுக்குடி சாலையில்
19 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 240
சிறப்பு :இறைவன் அளித்த நெல் மலையை எடுத்துச் செல்ல சுந்தரமூர்த்தி நாயனார் ஆள் வேண்டிப் பெற்ற தலம்.
சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. பிரமன், அகத்தியர் வழிபட்ட தலம். பகாசூரனைக் கொன்ற பாவம் நீங்க பீமன் வழிபட்ட
தலம். இறைவன் வெண்மணலால் ஆன இலிங்கம். கோள்களினால் (நவக்கிரகங்களால்) ஏற்படும் துன்பங்களை இல்லாமல்
நீக்கி அருள் புரியும் தலமாதலால் கோளிலி எனப்பெயர் பெற்றது. சுந்தரர் பரவையாருடன் உற்சவமூர்த்தியாக்க் காட்சி அளிக்கிறார்.
நவக்கிரகங்கள் அனைத்தும் தென்முகமாக நோக்கி அமைந்துள்ளன. கோயிலுக்கு அருகில் சந்திர நதி ஓடுகிறது.
இறைவன்: பிரமபுரீஸ்வரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்
இறைவி : வண்டமர்பூங்குழலி
தலமரம் : தேற்றா மரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு கோளிலிநாதேஸ்வரர் திருக்கோயில்,
திருக்குவளை & அஞ்சல் – 610 204
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.30 ; மாலை 04.30 – 09.00
தொடர்புக்கு : 04366-245412
இருப்பிட வரைபடம்
|