அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. அகத்தியான்பள்ளியிலிருந்து 2 கி.மீ.
செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 244
சிறப்பு : திருப்பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமுதகலசத்தை வாயு எடுத்துச் சென்றபோது அதில் சிந்திய
அமுதம் இத்தலத்துச் சிவலிங்கம் என்பர். இந்திரன், பிரமன், குழக முனிவர் வழிபட்ட தலம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன.
இறைவன்: கோடிக்குழகர், அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
இறைவி : அஞ்சனாட்சி, மைத்தடங்கண்ணி
தலமரம் : குரா மரம்
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு அமுதகடேஸ்வரர் திருக்கோயில்,
கோடியக்காடு & அஞ்சல் – 614 821,
(வழி) வேதாரண்யம்,
வேதாரண்யம் வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 04369-272470
இருப்பிட வரைபடம்
|