அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 315 கி.மீ., தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 20 ஆவது கி.மீ. ல்
உள்ளது இத் தலம். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தஞ்சைக்கும் கும்பகோணத்திற்கும் நடுவில் உள்ளது. பாபநாசத்திலிருந்து 6 கி.மீ.
செங்கல்பட்டிலிருந்து 335 கி.மீ., சென்னையிலிருந்து 385 கி.மீ. திருச்சியிலிருந்து 78 கி.மீ. மதுரையிலிருந்து 208 கி.மீ.
வரிசை எண் : 135
சிறப்பு : ஊர்த்துவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் காப்பாற்றியதால்
கருகாவூர் எனப்பெற்றது. பஞ்ச ஆரண்யங்கள் என்பவை கருகாவூர் (முல்லைவனம்), அவளிவணல்லூர் (பாதிரிவனம்), அரதைப்பெரும்பாழி
(வன்னிவனம்), இரும்பூளை (பூளைவனம்), கொள்ளம்புதூர் (வில்வவனம்). இவற்றை முறையே வைகறை (அதிகாலை), காலை,
நண்பகல், மாலை, அர்த்தஜாமம் காலங்களில் வழிபடவேண்டும் என்பது மரபு. இத் தலத்தை வழிபடும் தாய்மார்களுக்குக் குறைப் பிரசவம்
ஏற்படுவதில்லை, பிரசவ வலியும் அதிகம் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. அம்பாள் கருக்காத்த ந் நாயகியாக விளங்குகிறாள். மூலவர்
சுயம்பு. உயரமான தோற்றம். முல்லை மலர் சார்த்தப்படுகிறது. நந்தி உளி கொண்டு செதுக்கப்படாதவர். திருமணங்கள், கருவளர் சடங்குகள்
போன்றவை இத் தலத்தில் நிகழ்த்தப்படுகின்றன. சுத்தமான நெய்யால் தீபமிட்டு அம்பாள் திருவடிக்கு நெய்யால் அபிஷேகம் செய்து அந்நெய்யை
உண்டால் மகப்பேறு உண்டாகும் என்றும், அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்ட விளக்கெண்ணையைத் தம் வயிற்றில்
தடவிக்கொள்ளும் தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் ஆகிறது என்றும் கூறப்படுகிறது. மேற்படி நெய்யும், விளக்கெண்ணையும் திருக்கோயில்
தேவஸ்தானத்திற்கு எழுதித் தபாலிலும் பெறலாம்.
இறைவன்: கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர்
இறைவி : கர்ப்பரட்சாம்பிகை, கருக்காத்தநாயகி
தலமரம் : முல்லை
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. கர்ப்பபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கருகாவூர் அஞ்சல் – 614 302,
பாபநாசம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 11.00
தொடர்புக்கு : 04144-227171
இருப்பிட வரைபடம்
|