அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 290 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து
68 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 278 கி.மீ., சென்னையிலிருந்து 333 கி.மீ. திருச்சியிலிருந்து 193 கி.மீ.
மதுரையிலிருந்து 325 கி.மீ.
வரிசை எண் : 164
சிறப்பு : அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத்தருளிய தலம்.
பிரமனுக்கு உபதேசம் செய்த தலம். குங்கிலியக் கலய நாயனார், காரி நாயனார் முத்தித் தலம். அபிராமி அந்தாதி
பாடப்பட்ட தலம். சஷ்டியப்த பூர்த்தி (மணிவிழா), சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் முதலியன இங்கு நிகழ்த்தப்
படுகின்றன. நவக்கிரக சந்நிதி இல்லை. காலசம்ஹார மூர்த்தி, அவர் திருவடியில் உதை பெற்று வீழ்ந்து கிடக்கும்
எமன் கண்டு மகிழத்தக்கவை.
இறைவன்: அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அபிராமி
தலமரம் : வில்வம், பிஞ்சிலம்
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கடையூர் & அஞ்சல் – 609 311
மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ; மாலை 04.00 – 09.30
தொடர்புக்கு : 04364-287429
இருப்பிட வரைபடம்
|