banner
சோழநாடு - திருக்கானூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 306 கி.மீ., திருவையாற்றிலிருந்து 24 கி.மீ. தொலைவில் கோயில். திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 6 கி.மீ. கொள்ளிடக்கரையில் உள்ளது. திருக்காட்டுப்பள்ளியிலிருந்து காவிரிப் பாலத்தைக் கடந்து வலப்புறம் செல்லும் கும்பகோணம் சாலையில் சிறிது தூரம் சென்று பின்பு இடப்புறம் செல்லும் திருக்கானூர் சாலையில் 3 கி.மீ. செல்லவேண்டும். கோயிலைச் சுற்றி மரங்கள். குடியிருப்பு ஏதும் இல்லை. பொழுது சாய்வதற்குள் போய் வந்துவிடவேண்டும். வெளிச்சம் ஏதுமில்லை. குருக்கள் மாலை 5 மணிக்கே வந்து போய்விடுவார். குருக்கள் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து வரவேண்டும். முன்கூட்டியே குருக்களுக்குத் தகவல் சொல்லி அழைத்துப் போவது நல்லது. செங்கல்பட்டிலிருந்து 296 கி.மீ., சென்னையிலிருந்து 346 கி.மீ. திருச்சியிலிருந்து 71 கி.மீ. மதுரையிலிருந்து 202 கி.மீ. பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.
வரிசை எண் : 110
சிறப்பு : அக்கினி வழிபட்ட தலம்
இறைவன்: செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
இறைவி : சிவலோகநாயகி
தலமரம் : -
தீர்த்தம் : கொள்ளிடம் தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. கரும்பேஸ்வரர் திருக்கோயில், (வழி) திருக்காட்டுப்பள்ளி, விஷ்ணம்பேட்டை & அஞ்சல் – 613 105. தஞ்சை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை - ; மாலை -
தொடர்புக்கு : 04362-320067, 9345009344

இருப்பிட வரைபடம்


திருவின் நாதனும் செம்மலர் மேலுறை
உருவனாய் உலகத்தின் உயிர்க்கெலாம்
கருவனாகி முளைத்தவன் கானூரில்
பரமனாய பரஞ்சுடர் காண்மினே
			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 திருவின் நாதனும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க