banner
சோழநாடு - திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 240 கி.மீ. கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி சாலையில் 5 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 236 கி.மீ., சென்னையிலிருந்து 281 கி.மீ. திருச்சியிலிருந்து 95 கி.மீ. மதுரையிலிருந்து 228 கி.மீ.
வரிசை எண் : 185
சிறப்பு : முற்காலத்தில் (சம்பந்தர் காலத்தில்) இங்கு சாக்கியர்கள் (பௌத்தர்கள்) அதிகம் வாழ்ந்த காரணத்தினால் இவ்விடம் சாக்கியர் கோட்டை என்று அழைக்கப்பட்டு பின்பு சாக்கோட்டை என்றானது. ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்கு வந்து தங்கியதால் கலயநல்லூர் என்றானதாகக் கூறுவர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது கையில் ருத்திராட்ச மாலையை அணிந்துள்ளார். லிங்கோற்பவர் பச்சைக்கல்லால் ஆனவர். 4 அடி உயர அர்த்தநாரீஸ்வரர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் தஞ்சை மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இறைவன்: அமிர்தகலசநாதர், அமிர்தகலேஸ்வரர்
இறைவி : அமிர்தவல்ல
ி தலமரம் : வன்னி
தீர்த்தம் :
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. அமிர்தகலேஸ்வரர் திருக்கோயில், சாக்கோட்டை அஞ்சல் – 612 401 கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 10.00 – 11.00 ; மாலை 05.00 – 06.00
தொடர்புக்கு : 9788202923

இருப்பிட வரைபடம்


தண்புனலும் வெண்மதியும் தாங்கிய செஞ்சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன்பாடி
உன்பலி கொண்டுழல் பரமன் உறையும் ஊர் நிறைநீர்
ஒழுக்குபுனல் அரிசிலின் கலய நல்லூரதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆருரன் நாவில் நயந்துறை செய்
பண்பயிலும் பத்துமிவை பத்தி செய்து பாட
வல்லவர்கள் அல்லலோடு பாவம் இலர்தாமே - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 தண்புனலும் வெண்மதியும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க