banner
சோழநாடு - திருக்கடவூர் மயானம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 292 கி.மீ. திருக்கடையூரிலிருந்து 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 280 கி.மீ., சென்னையிலிருந்து 335 கி.மீ. திருச்சியிலிருந்து 195 கி.மீ. மதுரையிலிருந்து 327 கி.மீ.
வரிசை எண் : 165
சிறப்பு : சிவபெருமான் பிரமனை அழித்துப் பின் மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை அருளிய தலம். இத்தலத்திலிருந்துதான் தினமும் கடவூர் கோயிலுக்கு அபிஷேகத்திற்காக நீர் கொண்டு செல்லப்படுகிறது. கொடி மரம் இல்லை.
இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி : மலர்க்குழல் மின்னம்மை
தலமரம் :
தீர்த்தம் : காசி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் மயானம், திருக்கடையூர் அஞ்சல் – 609 311 மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ; மாலை 04.00 – 09.30
தொடர்புக்கு : 04364-287222, 9442012133

இருப்பிட வரைபடம்


குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தான் கடவூர் மயானத்தார்
பழையர்தம் அடியார் செய்த பாவமும்
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே 
பாடல் கேளுங்கள்
 குழைகொள் காதினர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க