banner
சோழநாடு - திருஇடைவாய் (திருவிடைவாயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் பாதையில் 2 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 275
சிறப்பு : 1917 ல் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தலம். மேடு ஒன்றினை வெட்டும்போது கிடைத்த தலம்.
இறைவன்: இடைவாய்நாதர், விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர்
இறைவி : உமையம்மை, அபிராமி
தலமரம் :
தீர்த்தம் : புண்ணியகோடி தீர்த்தம் பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு விடைவாயப்பர் திருக்கோயில், திருவிடைவாயில் கூத்தாநல்லூர் அஞ்சல் – 614 101, தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 10.30 – 12.00 ; மாலை ??
தொடர்புக்கு : 9943666180

இருப்பிட வரைபடம்


மறியார் கரத்து எந்தை அம்மாதுமையோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர்
பொறிவாய் வரிவண்டு தன்பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே 
        - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மறியார் கரத்து எந்தை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க