அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 305 கி.மீ., திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில்
5 ஆவது கி.மீ. ல் உள்ளது. இது ஒரு மலைக் கோயில். செங்கல்பட்டிலிருந்து 285 கி.மீ.,
சென்னையிலிருந்து 335 கி.மீ. மதுரையிலிருந்து 155 கி.மீ.
வரிசை எண் : 124
சிறப்பு : இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவில் இறைவனைப் பூசித்த தலம். 125 படிகள் கொண்ட
சிறிய மலை. சிவலிங்கத் திருமேனி சற்று வலப்பக்கம் சாய்ந்துள்ளது. மேற்புறம் சொரசொரப்பாக உள்ளது.
எறும்புகள் மேலே ஏறும்போது அவை வழுக்காமலிருக்க அவ்வாறு இறைவன் தன்னை ஆக்கிக் கொண்டார்
என்பது வரலாறு. சிவலிங்கத்தின் மேல் எறும்புகள் ஊர்ந்த அடையாளம் காணப்படுகிறது.
பிப்பிலி என்றால் எறும்பு.
இறைவன்: பிப்பிலிகேஸ்வரர், எறும்பீஸ்வரர், மதுவனேஸ்வரர், மாணிக்கநாதர்
இறைவி : சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர் & அஞ்சல் – 620 013,
திருச்சி திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ;மாலை 04.00 - 08.30
தொடர்புக்கு : 0431-2510241, 0431-6574738
இருப்பிட வரைபடம்
|