banner
சோழநாடு - திருச்செங்காட்டங்குடி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 265 கி.மீ. திருக்கண்ணபுரத்திலிருந்து 3 கி.மீ. திருமருகலிலிருந்து 3 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 263 கி.மீ., சென்னையிலிருந்து 308 கி.மீ. திருச்சியிலிருந்து 153 கி.மீ. மதுரையிலிருந்து 298 கி.மீ.
வரிசை எண் : 196
சிறப்பு : சிறுத்தொண்டர் நாயனார் அருள் பெற்ற தலம். கஜமுகாசூரனைக் கொன்றதால் உண்டான பாவம் தீர கணபதி வழிபட்டதால் கணபதீச்சரம் என்ற பெயரும் உண்டு. கஜமுகாசூரனின் இரத்தம் தோய்ந்த்தால் இப்பகுதி செந்நிறமானது. அதனால் செங்காட்டங்குடி என்று பெயர் பெற்றது. பைரவர் வேடத்தில் வந்து இறைவன் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி (சந்தனமங்கை) ஆகியோருக்கும் அருள் தந்த தலம். பல்லவ மன்னனின் தளபதியாக இருந்தவர் பரஞ்ஜோதி. அவர் வாதாபி நகரில் சாளுக்கியரோடு நடந்த போரில் வெற்றி பெற்று அங்கிருந்து கணபதியைக் கொண்டு வந்து இங்கு பிரதிட்டை செய்ததால் இக் கணபதிக்கு வாதாபி கணபதி என்று பெயர். போருக்குப் பின் பரஞ்சோதியின் மனம் சிவ வழிபாட்டிலும் சிவனடியார் தொண்டிலும் ஈடுபட்டது. அதன் பிறகு அவர் செய்த தொண்டின் காரணமாக அவருக்கு சிறுத்தொண்டர் என்ற பெயர் ஏற்பட்டது. இறைவன் அமர்ந்திருக்க அவரை அமுது செய்ய நாயனார் அழைக்கும் சிற்பமும், சந்தனமங்கை, சீராளன் (நாயனாரின் மகன்), திருவெண்காட்டுநங்கை (நாயனாரின் மனைவி), சிறுதொண்டர் ஆகியோரது சிலைகளும் காணலாம். வாதாபி கணபதி தனிக்கோயில். கருவறை அகழி அமைப்பு. மரகத லிங்கம் உள்ளது. இறைவன்(உத்திராபதீஸ்வரர்) அமுது செய்த விழா சித்திரைப் பரணியில் நடத்தப்படுகிறது. கோயிலின் பின்புற வீதியில் சிறுத்தொண்டர் மாளிகை உள்ளது. அது கோயிலாக மற்றப்பட்டுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், அவர் மனைவி இறைவனுக்கு அன்னம் படைக்கும் காட்சி கொண்ட திருமேனிகள் உள்ளன. ஐயடிகள் காடவர்கோனுக்கு இவ் இறைவர் காட்சி கொடுத்துள்ளார்.
இறைவன்: உத்தராபதீஸ்வரர், ஆத்திவன்நாதர்
இறைவி : சூளிகாம்பாள்
தலமரம் : ஆத்தி
தீர்த்தம் :
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. உத்தராபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம் அஞ்சல் – 609 704 நாகை வட்டம் நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 06.00
தொடர்புக்கு : 04366-270278

இருப்பிட வரைபடம்


பைங்கோட்டு மலர்ப்புன்னை பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டம் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டம் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே
          - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பைங்கோட்டு மலர்ப்புன்னை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க