banner
சோழநாடு - திருஆனைக்கா

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 305 கி.மீ., திருச்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 290 கி.மீ., சென்னையிலிருந்து 340 கி.மீ. மதுரையிலிருந்து 155 கி.மீ.
வரிசை எண் : 114
சிறப்பு : வெண்ணாவல் மரத்தினடியில் இறைவன் எழுந்தருளியுள்ளார். வெள்ளையானையும், சிலந்தியும் வழிபட்ட தலம். யானை வழிபட்டதால் திருஆனைக்கா என்றானது. முற்பிறவியில் சிலந்தியாக இருந்து இறைவனுக்குத் தன் வாய் நூலால் பந்தர் அமைத்ததன் காரணமாக மறு பிறவியில் கோச்செங்கணானாகப் பிறந்து இறைவனுக்குப் பல மாடக்கோயில்கள் (யானை புகாதவாறு) கட்டியதாக வரலாறு. அதில் ஒன்றுதான் இந்த திருஆனைக்கா கோயில். இது பஞ்ச பூதத் தலங்களுள் நீர்த் (அப்பு) தலம். இறைவன் திருவடியில் எப்போதும் நீர் சுரந்துகொண்டே இருக்கும். அம்பிகை இறைவனைப் பூசித்த தலம். உச்சிக் கால பூசையில் குருக்கள் அம்பிகையைப் போல் வேடமணிந்து இறைவனுக்குப் பூசை செய்வதைக் காணலாம். இக் கோயிலின் நான்காம் பிராகார மதிற்சுவர் 32 அடி உயரமும் 8000 அடி நீளமும் கொண்டது.
இறைவன்: ஜம்புகேஸ்வரர், அப்புலிங்கேஸ்வரர், ஜம்புநாதர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தலமரம் : வெண்ணாவல்
தீர்த்தம் : காவிரி
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா & அஞ்சல் – 620 005 திருச்சி வட்டம், திருச்சி மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 01.00 ;மாலை 03.00 – 08.00
தொடர்புக்கு : 0431-2230257

இருப்பிட வரைபடம்


நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே
படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள்
தடையொன்றின்றியே தன் அடைந்தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 நடையை மெய் என்று நாத்திகம்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க