banner
சோழநாடு - தென்குடித்திட்டை (திட்டை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 310 கி.மீ., தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் தஞ்சையிலிருந்து 9 ஆவது கி.மீ. ல் உள்ளது இத் தலம். கும்பகோணத்திலிருந்து பாபநாசம், மேலட்டூர் வழியாகவும் வரலாம். கும்பகோணம்-திருக்கருகாவூர் நகரப்பேருந்து இக்கோயில் வழியாகச் செல்கிறது. செங்கல்பட்டிலிருந்து 330 கி.மீ., சென்னையிலிருந்து 380 கி.மீ. மதுரையிலிருந்து 205 கி.மீ.
வரிசை எண் : 132
சிறப்பு : வெண்ணாறு, வெட்டாறு ஆகிய நதிகளின் இடையில் அமைந்துள்ளது. அதனால் திட்டை என்று பெயர். பிரளய காலத்தில் இந்த இடம் திட்டாகத் தெரிந்ததால் திட்டை என வழங்கப்பட்டது என்றும் கூறுவர். குரு சந்நிதி தனிக் கோயிலாக உள்ளது. மூலவர் சுயம்பு. கருவறையின் விமானத்தில் சந்திரகாந்தக் கல் பதிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து 25 நிமிடத்திற்கு ஒரு முறை இறைவன் மேல் நீர்த்துளி இன்றும் விழுகிறது. சந்திரகாந்தக் கல்லிற்கு சந்திரனின் கிரணங்களிலிருந்து ஈரத்தை வாங்கி தேக்கி வைத்துக் கொள்ளும் சக்தி உண்டு. அந்த ஈரமே இறைவன் மேல் ஒவ்வொரு சொட்டாக விழுகிறது. கருங்கல் கொடிமரம். சந்நிதிகள் எல்லாமே இழைக்கப்பட்ட கருங்கல்லால் ஆனவை. மிகப்பெரிய குளம்.
இறைவன்: வசிஷ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், தேனுப்புரீஸ்வரர்
இறைவி : உலகநாயகி, மங்களாம்பிகை, மங்களேஸ்வரி
தலமரம் : செண்பகம்
தீர்த்தம் : சூல தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை, பசுபதிகோயில் அஞ்சல் – 614 206, தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 9443445864, 04362-252858

இருப்பிட வரைபடம்


கானலைக்கும் அவன் கண்ணிடந்தப்ப நீள்
வானலைக்கும் தவத்தேவு வைத்தானிடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக்கும் வயல் தென்குடித் திட்டையே 
		- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 கானலைக்கும் அவன்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க