banner
சோழநாடு - தருமபுரம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 255 கி.மீ. திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்று மாதா கோயிலுக்கு வலப்புறம் சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 242 கி.மீ., சென்னையிலிருந்து 297 கி.மீ. திருச்சியிலிருந்து 144 கி.மீ. மதுரையிலிருந்து 302 கி.மீ.
வரிசை எண் : 168
சிறப்பு : மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க நினைத்த தருமன் (இயமன்) தன் பிழை நீங்க வழிபட்ட தலம். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத்தலம். திருஞானசம்பந்தரின் மாதர் மடப்பிடியும் எனத் தொடங்கும் யாழ்மூரிப் பதிகம் பெற்ற தலம்.
இறைவன்: தருமபுரீஸ்வரர், யாழ்மூரிநாதர்
இறைவி : மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி
தலமரம் : வாழை
தீர்த்தம் : தரும தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், காரைக்கால் & அஞ்சல் – 609 602 புதுவை மாநிலம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 09.00
தொடர்புக்கு : 9940755484

இருப்பிட வரைபடம்


மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
 நடையுடை மலைமகள் துணையென மகிழ்வர்
பூத இனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர்
 அவர்படர் சடைந் நெடு முடியதோர் புனலர்
வேதமொடு ஏழிசைபாடுவர் ஆழ்கடல் வெண்டிரை
 இரை நுரை கரை பொருது விம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறை வண்டறை
 எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே
பாடல் கேளுங்கள்
 மாதர் மடப்பிடியும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க