அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 323 கி.மீ. திருத்துறைப்பூண்டியிலிருந்து
திருவாரூர் சாலையில் 3 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 279 கி.மீ., சென்னையிலிருந்து 366
கி.மீ. திருச்சியிலிருந்து 120 கி.மீ. மதுரையிலிருந்து 218 கி.மீ.
வரிசை எண் : 227
சிறப்பு : அரிவாட்டாய நாயனார் முத்தி பெற்ற தலம். இவருடைய அவதாரத் தலம் கணமங்கலம் (கண்ணத்தங்குடி)
அருகில் உள்ளது. மாடக்கோயில். ஊர் - தண்டலை, கோயில் – நீள்நெறி. கருவறைக்கு முன் மண்டபத்தில்
கோச்செங்கட்சோழன், அரிவாட்டாய நாயனார் திருமேனிகள் உள்ளன. உள் செல்லும்போது மேலே அரிவாட்டாய
நாயனார் அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவதுபோலவும், நாயனார் தம் கழுத்தை அரிய முற்படும்போது
இறைவன் கை அவரைத் தடுப்பது போலவும் சிற்பங்கள் உள்ளன.
இறைவன்: ஸ்திரபுத்தீஸ்வரர், நீள்நெறிநாதர்
இறைவி : ஞானாம்பிகை
தலமரம் : குருந்தை
தீர்த்தம் : ஓமக தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. நீள்நெறிநாத சுவாமி திருக்கோயில்,
தண்டலைச்சேரி கிராமம்,
வேளூர் அஞ்சல் – 614 715
(வழி) திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.30 ; மாலை 06.00 – 08.30
தொடர்புக்கு : 9865844677
இருப்பிட வரைபடம்
|