banner
சோழநாடு - தலையாலங்காடு

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 280 கி.மீ. திருவாரூர்-கும்பகோணம் சாலையில் 18 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 278 கி.மீ., சென்னையிலிருந்து 323 கி.மீ. திருச்சியிலிருந்து 143 கி.மீ. மதுரையிலிருந்து 285 கி.மீ.
வரிசை எண் : 210
சிறப்பு : முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன்நடனமாடிய தலம். கபில முனிவர் வழிபட்ட தலம். இத் தலத்தில் நீராடித் தீபமிட்டு இறைவனை வழிபட்டால் வெண்குஷ்ட நோய் நீங்கும் என்பது வரலாறு.
இறைவன்: நடனேஸ்வரர், ஆடவல்லநாதர்
இறைவி : உமாதேவி
தலமரம் :
தீர்த்தம் :
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. நடனேஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு, செம்பங்குடி அஞ்சல் – 612603 குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 10.30 ; மாலை 05.00 – 07.00
தொடர்புக்கு : 04366-269235

இருப்பிட வரைபடம்


மெய்த்தவத்தை வேதத்தை வேதவித்தை
விளங்கு இளமாமதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை
இடர்க்கடலில் வீழாமே ஏறவாங்கி
பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானைப்
புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே - அப்பர்
பாடல் கேளுங்கள்
 மெய்த்தவத்தை வேதத்தை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க