அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 235 கி.மீ. குடவாசல்-நன்னிலம்-திருவாரூர்
சாலையில் சென்று அச்சுதமங்களம் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 236 கி.மீ., சென்னையிலிருந்து
276 கி.மீ. திருச்சியிலிருந்து 90 கி.மீ. மதுரையிலிருந்து 263 கி.மீ.
வரிசை எண் : 187
சிறப்பு : காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் தலங்களுள் இதுவும் ஒன்று. எமன் வழிபட்ட தலம். இங்கு எமனுக்குத் தனி கோயில்
உள்ளது. இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வாதனை இல்லை. எமனுக்கு உரிய வாகனமும் இங்குள்ளது. பிரமன், இந்திரன், பராசரர்
வழிபட்ட தலம். எமனை வழிபட்ட பின்னர் இறைவனை வழிபடுகின்றனர். மூலவர் சுயம்பு. இறைவனுக்கு எமன் வாகனமான தலம்.
இறைவன்: வாஞ்சிநாதேஸ்வரர், வாஞ்சிலிங்கேஸ்வரர்
இறைவி : மங்களநாயகி, வாழவந்தநாயகி
தலமரம் : சந்தனம்
தீர்த்தம் : குப்தகங்கை, எமதீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்,
ஸ்ரீவாஞ்சியம் & அஞ்சல் – 610 110
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9486044334
இருப்பிட வரைபடம்
|