banner
சோழநாடு - சிவபுரம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 245 கி.மீ. கும்பகோணம்-திருவாரூர் சாலையில ் சாக்கோட்டையைத் தாண்டி இடப்புறம் செல்லும் கிளைப்பாதையில் மலையப்பநல்லூர் சென்று அங்கிருந்து 2 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 241 கி.மீ., சென்னையிலிருந்து 286 கி.மீ. திருச்சியிலிருந்து 100 கி.மீ. மதுரையிலிருந்து 233 கி.மீ.
வரிசை எண் : 184
சிறப்பு : திருமால் பன்றி வடிவம் கொண்டு வழிபட்ட தலம். பட்டினத்தார், அருணகிரிநாதர் வழிபட்ட தலம். பட்டினத்தார் தமக்கை வாழ்ந்த தலம்.
இறைவன்: சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், சிவபுரநாதர்
இறைவி : ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி
தலமரம் : சண்பகம்
தீர்த்தம் :சந்தர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம், சாக்கோட்டை அஞ்சல் – 612 401 கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 0435-2414453, 9865306840

இருப்பிட வரைபடம்


பாரவன் காண் பாரதனிற் பயிரானான் காண்
பயிர்வளர்க்கும் தூளியவன் காண் துளியினின்ற
நீரவன் காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான் காண் 
நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும்
சீரவன் காண் சீருடைய தேவர்க் கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வந்தானே 
பாடல் கேளுங்கள்
 பாரவன் காண்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க