banner
சோழநாடு - சிறுகுடி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 254 கி.மீ. பூந்தோட்டம் வந்து அரிசிலாற்றுப் பாலம் கடந்து வலப்பக்கம் செல்லும் நாச்சியார்கோயில் சாலையில் கூத்தனூர் வழியாக கடகம்பாடி சென்று அங்கிருந்து 2 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 284 கி.மீ., சென்னையிலிருந்து 334 கி.மீ. திருச்சியிலிருந்து 124 கி.மீ. மதுரையிலிருந்து 254 கி.மீ.
வரிசை எண் : 177
சிறப்பு : பண்ணன் என்னும் கொடை வள்ளல் இத்தலத்தில் வாழ்ந்தவன். கைப்பிடி (சிறுபிடி) அளவு மண் பிடித்தும் மங்கள தீர்த்தம் உண்டாக்கியும் வழிபட்ட தலம். சிறுபிடி என்பது சிறுகுடி என்று மருவியதாக கூறுவர். கருடன், செவ்வாய், கந்தர்வர் வழிபட்ட தலம். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு நீராடி வழிபட்டுச் செல்கிறார்கள். செவ்வாய் வழிபாடு இங்கு விசேடம். மூலவர் திருமேனியில் பள்ளமும் அம்பாள் பிடித்த வடுவும் உள்ளன. சுவாமிக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் ஒரு தேனடை உள்ளது. அதனைப் பாதுகாத்து வருகிறார்கள். உற்சவ மூர்த்திகளுள் சந்திரசேகர் அம்பாள் திருமேனியில் கைபோட்டு ஆலிங்கனம் செய்வது போல் உள்ள காட்சி கண்டு மகிழத்தக்கது. திருவாதிரையும் மார்கழி செவ்வாய் நாட்களும் இங்கு சிறப்பு .
இறைவன்: சூட்சமபுரீஸ்வரர், சிறுகுடியீசர்
இறைவி : மங்களநாயகி, மங்களாம்பிகை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சூட்சமபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சிறுகுடி, சரபோஜிராஜபுரம் அஞ்சல் – 609 503 (வழி) பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 06.00
தொடர்புக்கு : 04366-291646

இருப்பிட வரைபடம்


செந்நெல் வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர்புரம் எரித்தீரே
ஒன்னலர்புரம் எரித்தீர் உமை உள்குவார்
சொன்னலமுடையவர் தொண்டே
பாடல் கேளுங்கள்
 செந்நெல் வயலணி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க